டெல்லியில் பா.ஜ.க, கட்சி அலுவலக கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் பா.ஜ.க, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ள நட்டா,பிரதமர் மோடி, அரசை மட்டுமல்ல, அரசியல் கலாசாரத்தையும் மாற்றியுள்ளார். எளிய பின்னணியில் இருப்பவர்களும் பிரதமராகவும், கட்சித் தலைவராகவும், மாநிலத் தலைவராகவும், முதல் அமைச்சராகவும் ஆக முடியும் என்ற கலாசாரத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார்.,மற்ற கட்சிகளை விட பா.ஜ.க, வித்தியாசமானது. மற்ற எல்லா கட்சிகளையும் பாருங்கள்; அவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்த பிறகு தங்கள் சித்தாந்தங்களில் இருந்து விலகி இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசுடன் கைகோர்த்து பா.ஜ.,வை எதிர்க்கிறது. ஆனால் எங்கள் கட்சி சித்தாந்தத்தில் வலுவாக நிற்கிறது. என்று பேசி உள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More