Mnadu News

மற்ற பிரதமர்களின் பங்களிப்பும் காட்டவேண்டும்: சஞ்சய் ரவுத் கருத்து.

டெல்லி தீன் மூர்த்தி பவனில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் பெயரை மத்திய அரசு பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் என்று மாற்றியுள்ளது. இதுகுறித்து ,செய்தியாளர்களிடம் பேசியுள்ள, சிவ சேனா உத்தவ் தாக்கரே அணி சிவ சேனா எம்பி சஞ்சய் ரவுத், மற்ற பிரதமர்களின் பங்களிப்பும் காட்டப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதற்காக அருங்காட்சியகத்தின் பெயரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பிரதம மந்திரிகள் அருங்காட்சியகத்திற்கு பண்டிட் நேருவின் பெயர் மீண்டும் வைக்கப்பட வேண்டும். ஜவகர்லால் நேரு நமது முதல் பிரதமர், நாட்டுக்கு அவர் நிறைய பங்களிப்பைச் செய்திருக்கிறார். இதன்மூலம் அவர்கள் வரலாற்றை அழிக்க முயல்கிறார்கள் வேறொன்றுமில்லை” என்று தெரிவித்து உள்ளார்.

Share this post with your friends