Mnadu News

மல்யுத்த சம்மேளனத் தேர்தல்: ஜூலை 6-க்கு நடைபெறும்.

மல்யுத்த சம்மேளனத் தேர்தல் குறித்து தேர்தல் அதிகாரி மகேஷ் மிட்டல் குமார் வெளியிட்ட அறிவிக்கையில்,இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 23-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதியுடன் முடிவடையும். தொடர்ந்து, வேட்புமனுக்கள் பரிசிலீக்கப்பட்டு, வேட்புமனுவைத் திரும்ப பெற அவகாசம் வழங்கப்படும். வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் ஜூலை 2-ஆம் தேதி வெளியிடப்படும்.அதையடுத்து, தேர்தல் வரும் ஜூலை 6-ஆம் தேதி நடைபெறும்.அன்றைய தினமே, முடிவுகளும் வெளியிடப்படும் என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

“பாடகி சுசீலா,கவிஞர் மு.மேத்தாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது”

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மானியக் கோரிக்கையில் தமிழ் திரையுலகில் சிறந்து விளங்குபவர்களை பாராட்டிடும்...

Read More