இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷண், தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மல்யுத்த வீராங்கனைகள் குற்றம்சாட்டினார். முன்னணி வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பிரிஜ் பூஷண் மீது டெல்லி காவல் துறை இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது.பின்னர்,அவர் மீது கடந்த 15-ஆம் தேதி குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் காவல் துறையினர் தாக்கல் செய்தனர். அதோடு, இந்திய மல்யுத்த சம்மேளனத் தேர்தல் வருகின்ற ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது., இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளதால் சாலைகளில் ஈடுபடும் போராட்டத்தை கைவிடுவதாகவும், நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தை தொடர்ந்து ஈடுபடுவோம் என்றும் மூத்த மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட் மற்றும் சாக்ஷி மாலிக் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More