டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்,வீராங்கனைகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் சரி, ஆம் ஆத்மி கட்சிகாராக இருந்தாலும் சரி,அல்லது பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,இல்லை,எந்தக் கட்சியையும் சாராதவராக இருந்தாலும் சரி, நம் நாட்டை நேசிக்கும் அனைவரும் இந்த மல்யுத்த வீரர்களுக்குஆதரவு அளிக்க இங்கு வர வேண்டும். ஏனெனில் இவர்கள் அனைவரும் நம் நாட்டு விளையாட்டு வீரர்கள் ஆவார்கள். எனவே, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும்,தண்ணீர்,மின்சாரம் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளை துண்டிக்க வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More