பாலியல் குற்றச்சாட்டு புகார் தொடர்பாக மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங், மீது முதல் தகவல் அறிக்கை பதியப்படவேண்டும் என்று கோரி ஏழு மல்யுத்த வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட், நீதிபதி பிஎஸ் நரசிம்ஹா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய வீராங்கனைகளின் இந்த குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது.அந்த மனு மீது டெல்லி போலீஸ் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் வழக்கை வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடும்படியும் உத்தரவிட்டனர். அதோடு. மனுதாக்கல் செய்த வீராங்கனைகளின் அடையாளம் தெரியாதவகையில், நீதித்துறை ஆவணங்களில் இருந்து அவர்களின் பெயர்களை நீக்கவும் உத்தரவிட்டனர்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More