தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மீது பாலியல் புகாரில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என மீண்டும் கடந்த ஏப். 23-ல் மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டம் காரணமாக பூஷன் சரண் சிங் மீது டில்லி போலீசார் போக்சோ உள்ளிட்ட இரு வழக்குகள் பதிந்தனர்.நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம் என மல்யுத்த வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென சில நபர்கள் போராட்டக்காரர்களிடம் அத்துமீறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு வன்முறை சம்பவம் நடந்தது. சீருடை அணியாத டெல்லி போலீசார் எனவும், அவர்கள் அனைவரும் மது அருந்தி விட்டு வந்து தாக்குதல் நடத்தியதாக மல்யுத்த நட்சத்திரங்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதையடுத்து, டெல்லி ஜந்தர் மந்தரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ட்வீட்களை திருத்த 1 மணி நேரம் அவகாசம்: ட்விட்டர் எடிட் பட்டன் அம்சம் அறிமுகம்.
பயனர்கள் ட்வீட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்வீட்களை திருத்த...
Read More