Mnadu News

மாசி மாத பூஜை: சபரிமலை கோயிலில் நடை திறப்பு.

மாசி மாதம் பிறக்க உள்ளதால், சபரிமலை அய்யப்பன் கோயில் மாதாந்திர பூஜைகளுக்காக கோவில் நடையை திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதோடு;, பக்தர்கள் தரிசனத்திற்கு ஆன்லைன் முன்பதிவும் தொடங்கியது. இதையடுத்து, சபரிமலை அய்யப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, கோயில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றினார்.அதையடுத்து நாளை காலை 5 மணிக்கு நடை திறக்கபட்டது.அதைத் தொடர்ந்து, நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அதையடுத்து காலை 5 மணி முதல்; மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும். 17 ஆம் தேதி வரை கோயில் திறந்திருக்கும். இந்த நாள்களில் நெய் அபிஷேகம், கலசாபிஷேகம், படி பூஜை போன்றவை நடைபெறும். ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 17 ஆம் தேதி இரவு 7 மணிக்கு படிபூஜை முடிந்ததும் 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவதை முன்னிட்டு ஆன்லைன் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Share this post with your friends

செங்கல் சூளைக்கு தடை கோரிய வழக்கில் ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மதுரை மேலூர் அருகே இயங்கும் செங்கல் சூளையில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுசூழல்...

Read More

பட்டாசு ஆலை தொழிலாளர்கள் பாதுகாப்பை அரசு உறுதி செய்க: அண்ணாமலை வலியுறுத்தல்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.; வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “காஞ்சிபுரம் குருவிமலை...

Read More