குஜராத் மாநிலம், பஞ்சமஹாலில் நேற்று நடந்த பேரணியில் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லியின் முதல் அமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய கேஜ்ரிவால், “குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், உங்கள் மாதந்தாந்திர மின்சாரக்கட்டணம் 3,ஆயிரம் ரூபாய் வருகிறது என்றால் இனி அது பூஜ்யமாக மாறும். இனி உங்கள் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது. அவர்களுக்கான கல்விக்கட்டணம், புத்தகச் செலவுகள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியத் தேவையில்லை. டெல்லியில் உருவாக்கியதைப் போன்ற பள்ளிகளை குஜராத்திலும் உருவாக்க நான் திட்டம் வைத்துள்ளேன்.
உங்கள் வீட்டில் 3 குழந்தைகள் இருந்தால், நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை கல்விக்கட்டணத்தை ; சேமிக்க முடியும். யாருக்காவது உங்கள் குடும்பத்தில் உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்களின் மருத்துவ செலவு குறித்து கவலைப்பட வேண்டாம் அதனை கேஜ்ரிவால் பார்த்துக்கொள்வேன் என்று பேசி உள்ளார்.