தலைமை நீதிபதியாகப் பதவியேற்ற பிறகு நீதிபதி சந்திரசூட் வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வருவது இதுவே முதல் முறையாகும். இதுகுறித்து ஸ்ரீP மாதா வைஷ்ணவி தேவி ஆலய நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கத்ராவுக்கு வந்தடைந்த இந்திய தலைமை நீதிபதியை ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி ஆலய நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அன்{ல் கர்க் வரவேற்றார். அவருடன் ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியும் உடனிருந்தனர்.,ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வைஷ்ணவி தேவி ஆலயத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் தொடர் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக ஸ்ரீP மாதா வைஷ்ணோ தேவி ஆலய நிர்வாகத்தின் துணைத்தலைவர் விளக்கினார். ,தலைமை நீதிபதி வைஷ்ணவி தேவியின் குகைக் கோயில் தரிசனத்திற்குப் பிறகு பைரோன்காட்டில் உள்ள பைரோன் பாபா கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். என்று கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More