Mnadu News

மாநகராட்சி பணியாளர்கள் பாராட்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

மழைக்காலங்களில் பணியாற்றிய சென்னை மாநகராட்சி பணியாளர்களை கவுரவிக்கும் விதமாக பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநகராட்சி பணியாளர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் முதல்-அமைச்சர் பேசியதாவது:- மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு பாராட்டுக்கள். மிகுந்த மகிழ்ச்சியில் பாராட்டு விழாவில் உரையாற்றுகிறேன். அரசு பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகிறது. இதில் கொரோனாவை எதிர்கொண்டு வென்றோம், மழை வெள்ளத்தில் மக்களைக் காத்தோம் என்ற இரண்டு சாதனைகளை படைத்துள்ளோம். மழையே, வெள்ளமோ ஏற்படும் முன், தண்ணீர் தேங்காத சூழலை ஏற்படுத்தும் என்று உறுதியேற்று, மிகப்பெரிய சாதனைகளை அரசு செய்துள்ளது. கடந்த மழை – இந்த மழையை ஒப்பிட்ட மக்கள் சமூக வலைதளங்களில் பாராட்டினர். அரசு பாராட்டு மழையில் நனைய காரணமே மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் தான். அமைச்சர் நேரு அன்பு, கோபம் இரண்டையும் பயன்படுத்தி பணியை சிறப்பாக முடிப்பார். இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள், மேயர், அதிகாரிகள் பணியாற்றினார்கள். மழைக்காலத்தில் மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது மிக மிகச் சிரமம். தூய்மை பணியாளர்களின் பணி மகத்தானது. மக்களுக்காக பணி செய்கிறோம் என்பது அவசியம். அதனால் தான் இந்த பாராட்டு விழா. மழை பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றிய பணியாளர்களுக்கு எனது பாராட்டுக்கள். கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் சென்னை மேயராக இருந்தவன் நான். ஒவ்வொரு வார்டும், ஒவ்வொரு தெருவும் எனக்குத் தெரியும். அந்த சிரமங்கள் என்ன என்பது எனக்குத் தெரியும். சம்பவம் நடந்த உடனே களத்திற்கு செல்வது தான் கருணாநிதியின் பாணி. 2021 பருவமழை அனுபவத்தை கொண்டு வெள்ள தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. மழைநீர் பாதிப்பு இல்லாமல் இருக்க தமிழக அரசு இன்னும் பல நடவடிக்கை எடுக்கும். மக்களின் மகிழ்ச்சியே நமது ஆட்சியின் இலக்கு. எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்று கூறினார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More