வெறுப்பு பேச்சு வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவுகள் பிறப்பித்துள்ளது.வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெறுப்பு பேச்சு மிகப்பெரிய குற்றம் என கூறிய உச்சநீதிமன்றம், வெறுப்பு பேச்சு நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதிக்கும் திறன் கொண்டது என்று கூறியது.அதோடு,வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்றாலும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசுபவர்கள் மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்,வழக்குப்பதிவு செய்ய தாமதம் ஏற்பட்டால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்து வழக்கு விசாரணையை மே12-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More