யார் இந்த மாரி செல்வராஜ் :
பா. ரஞ்சித் உடன் இணை இயக்குனராக பணியாற்றி பின்பு இயக்குனராக “பரியேறும் பெருமாள்” படத்தின் மூலம் அறிமுகமாகி திரை துறையில் பரவலான கவனத்தை தன் முதல் படத்திலேயே பெற்றவர் இவர்.

தனுஷ் – மாரி கூட்டணி:
பரியேறும் பெருமாள் படத்துக்கு பிறகு மாரி எந்த மாதிரி படத்தை யாருடன் கூட்டணி அமைத்து இயக்க போகிறார் என்கிற கேள்வி பலருக்கும் எழுந்தது. அதற்கு விடையாக அமைந்தது “கர்ணன்”. வசூல், விமர்சனம் என இரண்டு ரீதியாகவும் இப்படம் வெற்றி பெற்று இவரை முக்கிய இயக்குனர்கள் இடத்துக்கு கொண்டு சென்றது.

மாமன்னன் உதயநிதி:
முதல் முறையாக இசை புயல் உடன் இணைந்து மாமன்னன் படத்தின் மூலம் பணியாற்றி வருகிறார். உதயநிதி, வடிவேலு மற்றும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் பணியாற்றி வருகின்றனர். விரைவில் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீடு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து அவர் சொந்த ஊரில் உள்ள வாழை தோப்பில் வாழ்ந்த வாழ்வை படமாக உருவாக்க உள்ளார் அது தான் “வாழை”.

மீண்டும் நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் கூட்டணி:
இதை தொடர்ந்து மீண்டும் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் க்கு ஒரு அரசியல் படத்தை இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
