Mnadu News

மாவீரன் ஆடியோ வெளியீடு எப்போ தெரியுமா?

சிவகார்த்திகேயன்:

கடந்த 12 வருடங்களாக திரை துறையில் வலம் வரும் சிவகார்த்திகேயன் நதி பயணிக்கும் மேடு பள்ளங்கள் போல இரண்டையும் கடந்து அமர்க்களமாக தமது திரை வாழ்வை நகர்த்தி வருகிறார். ஆம், இன்று அஜித் விஜய் வரிசையில் இவருக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. சில தவறான கதை தேர்வுகள் மூலம் சரியான பாடம் கற்ற சிவகார்த்திகேயன் தற்போது சரியான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் எதிர்பார்த்து காத்திருக்கும் முக்கியமான படம் “மாவீரன்”.

மாவீரன் குழு :

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், யோகி பாபு, மிஷ்கின், சரிதா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் “மாவீரன்”. பரத் ஷங்கர் இசையில், மடோன் அஷ்வின் இப்படத்துக்கு இசை அமைக்கிறார். ஏற்கனவே, மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி உள்ளது எனலாம்.

கதையின் நாட்:

கதைப்படி ஒரு ஓவிய கலைஞனாக உள்ள சிவா தீட்டும் ஓவியங்கள் சம்பவங்களாக நிகழ்கின்றன. இதுவே படத்தின் நாட். புதிய கதைக்களத்தில் தேசிய விருது இயக்குனருடன் கைகோர்த்து இருக்கும் சிவாவுக்கு இந்த படம் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

இசை வெளியீடு :

அடுத்த மாதம் இரண்டாம் தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபலமான பொறியியல் கல்லூரியில் மாவீரன் படத்தின் இசை வெளியீடு நிகழ உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 10 அன்று வெளியாக இருந்த மாவீரன், ஜெயிலர் படத்தின் வெளியீடு காரணமாக முன் கூட்டியே வெளியிட உள்ளது. அதன்படி, ஜூலை 14 அன்று திரை அரங்குகளில் மாவீரன் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More