உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்ய பாதுகாப்பு படையினருடன் இணைந்து ‛வாக்னர் ‘ எனப்படும் தனியார் ராணுவக் குழுவும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால், இந்த குழுவினர் தற்போது ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி உள்ளனர். உக்ரைன் போரின் போதும் தங்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை எனக்குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து,இந்த குழுவானது, ரோஸ்டாவ் ஆன் டான் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை கைப்பற்றி உள்ளதோடு,வாக்னர் குழுவினர் மாஸ்கோவை நோக்கி முன்னேறுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, அக்குழுவின் வாகனங்கள் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதாக சர்வதேச செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More