Mnadu News

மினி டைடல் பூங்காவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

வேலூர் மாவட்டத்தில் 4 புள்ளி ஒன்பது எட்டு ஏக்கரில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி, 7 ஆயிரத்து 874 கோடி ரூபாய் முதலீட்டில், 3 ஆயிரத்து 316 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓலா நிறுவனத்துடன் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச. கிருஷ்ணன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீP முரளிதரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் செயலாளர் மற்றும் டைடல் பூங்கா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ம. பல்லவி பல்தேவ், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் வே. விஷ்ணு, ஓலா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் பவிஷ் அகர்வால், குழுமத் தலைவர் அருண் குமார், துணைத் தலைவர் பி.சி. தத்தா மற்றும் முதுநிலை இயக்குநர் சௌரப் ஷர்தா, ஐநாக்ஸ் நிறுவனத்தின் தென் மண்டல வணிகத் தலைவர் டிகந்த சர்மா, துணைப் பொது மேலாளர் (விற்பனை) ரங்கராஜன் மற்றும் விற்பனை மேலாளர் ரமேஷ் ராவ், புஓ குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் பரிதோஷ் பிரஜாபதி, வர்த்தகத் தலைவர் சம்பித் ஸ்வைன், தொழில்நுட்பத் தலைவர் வினய் சர்மா, நெதர்லாந்து நாட்டிற்கான கௌரவ துணைத் தூதர் கோபால் சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Share this post with your friends