Mnadu News

மின்னஞ்சல் மூலம் பணி நீக்க ஆணையை அனுப்பிய அமேசான்! பல ஆயிரம் ஊழியர்களின் நிலை கேள்விக்குறி!

கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பல முன்னணி நிறுவனங்கள் முதல் சாதாரண நிறுவனங்கள் வரை தங்கள் பல ஊழியர்களை பணி நீக்கம் செய்து அனுப்பி வருகின்றனர். இது கொரோனா பெருந்தொற்று ஆரம்பமான
நாளில் இருந்தே துவங்கியது.

டுவிட்டர், மெட்டா போன்ற நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தில் இருந்து 3 சதவீத ஊழியர்களை அதிரடியாக நீக்கி அதிர்ச்சி கொடுத்தது. அந்த அதிர்ச்சித் உலக அளவில் அடங்குவதற்குள் இன்னொரு மாபெரும் நிறுவனமான அமேசான் ஆட்குறைப்பை துவங்கி உள்ளது தற்போது பெரும் பேசு பொருளாகி உள்ளது.

மின்னஞ்சல் மூலம் பணி நீக்க ஆணையை அனுப்பி ஊழியர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளது. இதனால் சுமார் 10,000 ஊழியர்களின் குடும்பங்கள் நிற்கதிக்கு தள்ளப்பட்டுள்ளன.

Share this post with your friends