Mnadu News

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க மேலும் அவகாசம்: செந்தில் பாலாஜி அறிவிப்பு.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு ஜனவரி 31-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கிய அவகாசம், இன்றுடன் நிறைவடைகிறது. நேற்றைய நிலவரப்படி, 2.34 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்திருந்தது.
இதுவரை மொத்தமாக 87.44 சதவீத மின் நுகர்வோர்கள், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும், இதுவரை இணைக்காவதவர்கள், விரைந்து இணைக்க வேண்டும் என்றும் தனது ட்விட்டரில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
10 சதவீதத்துக்கும் அதிகமானோர் இன்னும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியிருப்பதால், 15 நாள்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends