போடி முதல் மதுரை வரை அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 12 ஆண்டுகளாக நடந்தது. இதில் மதுரையில் இருந்து தேனி வரை முதற்கட்டமாக அனைத்து பணிகளும் நிறைவடைந்தது.இதனையடுத்து, கடந்தாண்டு மே 26ம் தேதி மதுரையில் இருந்து தேனி வரை பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இதற்கிடையில் மதுரையில் இருந்து போடி வரையிலான ரயிலை மின்சார ரயிலாக மாற்ற தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.இதற்காக மதுரையில் இருந்து போடி வரை உள்ள உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, தேனி ஆகிய 3 ரயில் நிலையங்களிலும் எங்கெங்கு மின்சார ரயில் சேவை கோபுரங்கள், மின்கம்பங்கள் அமைப்பது போன்ற சர்வே செய்யும் பணி நடந்தது. இதற்கான சோதனை ரயில் இன்ஜின் ஓட்டம் மதுரையில் இருந்து போடிக்கு சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More