நிலநடுக்கங்கள் குறித்து தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து மூன்று முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. அதன்படி முதலில், யான்கோனில் ரிக்டர் அளவில் 4புள்ளி ஐந்து அலகுகளாக நிலநடுக்கம் ஏற்பட்டது.இது,48 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இரண்டாவதாக யான்கோனில் 160 கிலோ மீட்டர் தூரத்தில் ரிக்டர் அளவில் 4 புள்ளி இரண்டு அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது. இது 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.மூன்றாவதாக யான்கோனின் 227 கிலோ மீட்டர் தூரத்திலும், 25 கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 4 புள்ளி நான்கு அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தேதி அறிவிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறும் தேதியை அக்கட்சியின் தலைவரும்,...
Read More