வங்கக் கடலில் தீவிரமடைந்து வரும் மோக்கா புயல் சின்னம் தற்போது வடக்கு நோக்கி நகர்கிறது.இது, மியான்மரின் சித்வே – வங்கதேசத்தின் காஸ் பஜார் பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த புயல் காரணமாக, கடல் அலைகள் கடும் சீற்றத்துடன் இருக்கும், கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு, புயல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதையடுத்து, மியான்மர் மற்றும் வங்கதேசத்தில் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.அதே நேரம்,கடற்கரைப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளும் தொடங்கியுள்ளன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More