சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், நந்தலாலா, பிசாசு, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், சைக்கோ ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் மிஷ்கின்.
இவர் படத்தில் கொலை, சண்டைக் காட்சிகளை எவ்வளவு ரசித்து எடுப்பாரோ அதே அளவுக்கு இவர் படத்தில் பாடல்களும் தனி கவனம் பெறும்.
தற்போது, “டெவில்” எனும் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகியுள்ளார். “சவரக்கத்தி” படத்தின் இயக்குனர் “ஆதித்யா” இப்படத்தை இயக்கி உள்ளார். தற்போது இப்படத்தின் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.