Mnadu News

மீண்டும் மோதும் SK மற்றும் கார்த்தி படங்கள்!

படங்களின் மீதான மோகம் :

அன்று முதல் இன்று வரை படங்கள் மீதான காதலும், நாயகர்கள் மீதான ஆர்வமும் துளியும் குறையாமல் ரசிகர்களிடம் இருந்து கொண்டே இருக்கிறது. ஆம், வாரா வாரம் எப்படி படங்கள் வெளியாவதை காண ஒவ்வொரு ரசிகனும் ஆவலோடு இருக்கிறாரோ, அப்படி தான் பண்டிகை காலங்களில் வரும் தங்களின் ஆதர்சன நாயகர்களின் படங்களை கொண்டாட தவறுவதில்லை.

பெரிய நடிகர்களின் படங்கள் :

தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் என இப்படி எல்லா பண்டிகை காலங்களிலும் பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே வரிசைகட்டுவது வழக்கம். ஆனால், இன்றைய நாளில் ஒரு சில படங்கள் மட்டுமே வருகின்றன. அதாவது முன்பெல்லாம் கிட்டதட்ட 6 படங்கள் வரை வந்த காலம் சென்று வெறும் இரண்டு படங்கள் என்கிற நிலையில் நிற்கிறது. இப்படி சூப்பர் ஸ்டார் ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது பல இரண்டாம் நிலை ஹீரோக்கள், அல்லது வளரும் ஹீரோக்களின் படங்களை படக்குழு வெளியீட்டை தள்ளி வைக்கும்.

பெரிய நடிகர்கள் படங்கள் இல்லாத தீபாவளி 2023 :

இந்த முறை தீபாவளி பண்டிகைக்கு எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாக போவதில்லை. ஆம், அவை அனைத்தும் முன்பே வெளியாவதால் இரண்டாம் நிலை ஹீரோக்களின் படங்களே இந்த தீபாவளி பண்டிகையை கொளுத்த போகும் சரவெடிகள்.

இரண்டாவது முறையாக மோதும் சிவகார்த்திகேயன் – கார்த்தி படங்கள்:

2022 ஆண்டு தீபாவளிக்கு SK வின் பிரின்ஸ், மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் வெளியாகின. இதில் பிரின்ஸ் சுமாரான வெற்றியை பதிவு செய்து, சர்தார் பிளாக் பஸ்டர் வெற்றி கண்டது. அதே போல நடிகர் கார்த்திக்கும் சென்ற வருடம் மூன்று வெற்றி படங்கள் அவரின் பெயருக்கு புகழ் சேர்த்தன. மீண்டும் அதே போல இந்த முறையும் Sk வின் அயலான் படமும், கார்த்தியின் ஜப்பான் படமும் தீபாவளி வெளியீட்டை உறுதி செய்து உள்ளன.

பொறுத்து இருந்து பார்ப்போம், சிவகார்த்திகேயன் மீண்டு வருவாரா, கார்த்தியின் வெற்றி தொடருமா, அல்லது இரு படங்களுமே சமமான வெற்றியை பதிவு செய்து கல்லா கட்டுமா என்று.

Share this post with your friends