Mnadu News

மீண்டும் ஹிந்தி பக்கம் செல்லும் ஏ ஆர் முருகதாஸ்! ஹீரோ யார் தெரியுமா?

ஏ ஆர் முருகதாஸ்:

“தீனா” படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர். ஆம், முதல் படமே இவருக்கு சிறந்த அங்கீகாரமாக அமைந்தது. ஏனென்றால் இந்த படத்தின் மூலம் அஜித்துக்கு “தல” என்ற அடைமொழியும் வந்து சேர்ந்தது. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக இப்படம் லாபகரமாக அமைந்தது.

நட்சத்திர ஹீரோக்களின் இயக்குநர்:

தொடர்ச்சியாக ஏ ஆர் முருகதாஸ் எடுத்த படங்கள் அவரை இன்னும் நட்சத்திர இயக்குனர்களின் பட்டியலில் கொண்டு சேர்த்தது எனலாம். ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் போன்ற பல படங்களை கொடுத்துள்ளார். இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பல முன்னணி ஹீரோக்களும் விரும்புவர். அப்படி, தன்னுடைய படங்களில் ஸ்கிரீன் பிளேவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார்.

சர்ச்சைகளின் நாயகன் :

எந்த அளவுக்கு இவரின் படங்கள் ஹிட் அடிக்கிறதோ அதே அளவுக்கு சர்ச்சைகளும் இவரை பின் தொடரும். ஒரு உதவி இயக்குனரின் கதையை அப்படியே எடுத்த படம் தான் “ரமணா”. அதே போல, இயக்குநர் கோபி நயனாரின் கதை தான் “கத்தி”. அதே மாதிரி இன்னொரு உதவி இயக்குநர் பதிவு செய்த கதை தான் “சர்கார்”, இப்படி படத்துக்கு படம் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் அவை இவரை பின் தொடரும்.

தர்பார் தோல்வியும் – விஜய் 65 டிராப்பும்:

பல வருடங்களாகவே ரஜினி, ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என ஆவலுடன் இருந்து வந்தார். அதன்படி, தனக்கு ஒரு கதையை தயார் செய்ய சொன்னார், அதுவும் இப்படத்தை விரைவாக எடுக்க வேண்டும் என ரஜினி கட்டளையிட, அது படு தோல்வியில் கொண்டு போய் சேர்த்தது. இதனால், அடுத்ததாக விஜய் உடன் இணைந்து பணியாற்ற வேண்டிய முருகதாஸ் அவர்களுக்கு, தர்பார் தோல்வியும், அவரின் சம்பளமும் பெரும் பின்னடைவு தந்தது.

மீண்டும் ஹிந்தி பக்கம் :

ஒரு செய்தியாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்க டாக்ஸ் நடந்து வருவதாக சொன்ன ஏ ஆர் முருகதாஸ், தற்போது சல்மான் கானை வைத்து ஒரு பிரபல ஹிந்தி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க போவதாக தகவல் கசிந்துள்ளது. அதற்காக ஏ ஆர் முருகதாஸ் அவர்களுக்கு ஒரு மிக பெரிய சம்பளம் பேசப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Share this post with your friends