மோக்கா புயல் வலுப்பெற்றுள்ளதால் வரும் 14 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக வலுப்பெற்றுள்ளது.இந்த நிலையில் மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவுறுத்தல் குறிப்பில், வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்பவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More