குடியரசுத் தலைவராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக தமிழகம் வந்துள்ள திரௌபதி முர்முரை தமிழக அரசு சார்பில் ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் மதுரை விமான நிலையம் சென்று வரவேற்றனர். பின்னர், மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்த அவருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மனைவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.அதன் பிறகு ,சாமி தரிசனம் செய்த குடியரசுத் தலைவருக்கு மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயிலில் மதிய உணவு உண்ட பிறகு மதுரையிலிருந்து கார் மூலம் விமானம் சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்கிறார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More