காங்கிரஸ் மூத்த தலைவரான அவதேஷ் ராய் கடந்த 1991-ஆம் ஆண்டு ஆகஸ்டு 3-ஆம் தேதி அவரது இளைய சகோதரர் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அஜய் ராய் என்பவரின் வீட்டின் முன் நின்று கொண்டு இருந்தபோது சுட்டு கொல்லப்பட்டார்.இதுபற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த எப்.ஐ.ஆர். பதிவில், முக்தார் அன்சாரி, அவரது உதவியாளர் பீம்சிங் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் கலீம் ஆகியோரது பெயரை அஜய் ராய் குறிப்பிட்டார்.அதையடுத்து, வாரணாசியில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கான நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. கடந்த மே 19-ஆம் தேதி விசாரணை முடிந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் முக்தார் அன்சாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து எம்.பி., எம்.எல்.ஏ.வுக்கான நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More