தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.
சென்னை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பொதுக்கூட்டங்கள் வாயிலாக தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் வடசென்னை தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து தனது சட்டமன்ற தொகுதியான கொளத்தூர் ஜி.கே.எம். காலனிக்கு உட்பட்ட தெருக்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தவெளி வாகனத்தில் நின்று வாக்கு சேகரித்தார். முன்னதாக மக்களை சந்தித்து துண்டு பிரசாரம் அளித்து வாக்கு சேகரித்தார்.
திறந்த வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தபோது சாலையில் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள், மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். காஞ்சீபுரம் தி.மு.க. வேட்பாளர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து இன்று மாலையில் பிரசாரம் செய்கிறார்.