Mnadu News

முதல்அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் பரிமாற்றம்.

ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் 500 மில்லியன் யூரோ நிதி உதவியுடன் அதாவது சுமார் 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான மூன்றாம் கட்ட நீடித்த நகர்ப்புற உட்கட்டமைப்பு வசதி தமிழகத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. அதற்காக, ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் இந்திய அரசு இடையே 24.11.2022 அன்று 500 மில்லியன் யூரோ நிதி உதவியுடன் அதாவது சுமார் 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தானது. அதனைத் தொடர்ந்து, சென்னையில் 2.12.2022 அன்று ஜெர்மன் மேம்பாட்டு வங்கி, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. அதோடு,ஜெர்மன் மேம்பாட்டு வங்கி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே தனி ஒப்பந்தமும் கையெழுத்தானது. இவ்விரண்டு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, சென்னையிலுள்ள ஜெர்மன் நாட்டு தூதரகத்தின் துணைத் தலைவர் மிக்கேலா குச்லர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் எஸ். ஸ்வர்ணா, துணைத் தலைவர் டி. ராஜேந்திரன், ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் இந்திய நாட்டிற்கான இயக்குநர் உல்ஃப் முத், முதுநிலை நகர்ப்புற துறை நிபுணர் கிரண் அவதானுலா, நகர்ப்புற துறை நிபுணர் அர்ச்சனா ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More