Mnadu News

முதல்மைராக இன்று பதவி ஏற்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தேரத்லில் 175 இடங்களில் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 151 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது .

இதனைத்தொடர்ந்து விஜவாடா அருகில் இருக்கும் இந்திரா காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது . இந்த விழாவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதியேற்கவுள்ளார் .

முதலமைச்சராக பதிவியேற்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநிலத்தின் ஆளுநர் ஈ.எஸ்.எல் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்துவைக்க உள்ளார் .மேலும் வெற்றிபெற்ற அமைச்சர்கள் வரும் 7 ஆம் தேதி பதவி ஏற்கவுள்ளனர் .

ஜெகன்மோகன் ரெட்டி அவர்களின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் தி மு க தலைவர் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .இதனைத்தொடர்ந்து ஜெகன் மோகன் மோடியின் பதவியேற்புவிழாவில் கலந்துகொள்ள டெல்லி செல்லவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது .

Share this post with your friends