Mnadu News

முதல் அமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்: 5 நிறுவனங்கள் தொடங்க ஒப்புதல்.

தமிழக சட்டப்பேரவை 5-ஆவது கூட்டத் தொடரின் இரண்டாவது கூட்டம், கடந்த மார்ச் 20-இல் தொடங்கி ஏப். 21 வரை நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.தொழில் துறையின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த சூழலில், முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இதில், பெட்ரோனாஸ், காட்டர்பில்லர் உள்பட 5 நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.அதோடு, முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Share this post with your friends

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...

Read More