Mnadu News

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர்; மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துப் பேசியுள்ளார். சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், வன்னியர்களுக்கான 10புள்ளி 5 சதவிதம் இட ஒதுக்கீடு குறித்து முதல் அமைச்சரிடம் பேசியதாகத் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் வன்னியர், தலித் ஆகிய இரு சமுதாயங்கள் தான் பின்தங்கியுள்ளன. இந்த இரு சமுதாயங்களை தமிழகத்தில் 40 சதவிதம் உள்ளன. வன்னியர் சமூகத்திற்கு இந்த இடஒதுக்கீடு அளிப்பதன் மூலமாக தமிழ்நாடும் வளர்ச்சி பெறும். இந்த இடஒதுக்கீட்டினால் யாருக்கும் பாதிப்பு இல்லை, எந்த சமூகத்திற்கும் எதிரானதும் இல்லை.அதோடு,; தருமபுரி – காவிரி உபரிநீர் திட்டம், அரியலூர் பாசனத் திட்டம் ஆகியவற்றை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். மேலும் தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. தமிழக அரசு மாதம் ஒருமுறை இதுகுறித்து ஆய்வு செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் அமைச்சரிடம் கூறினோம்’ என்றார்.

Share this post with your friends