Mnadu News

முதல் அமைச்சர்; மு.க.ஸ்டாலினுடன் ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்திப்பு.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார்.இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன், சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு முதல் அமைச்சர்; வாழ்த்து தெரிவித்ததாகக் கூறினார். இடைத்தேர்தல் ஒரு சாக்கடை என முன்பு கூறியது குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த இளங்கோவன், ‘ஒவ்வொரு கூட்டணி ஏற்படும்போதும் அரசியல் சூழ்நிலை மாறும். அதற்கேற்ப கருத்துகளை சொல்வது இயல்புதான். ஒரு காலத்தில் தவறான கருத்தைச் சொன்னால் அதை திருத்திக்கொள்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன்’ என்றார். மேலும் தென்னரசு கூறியது குறித்து, ‘வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் நியாயமாக நடந்தது என்று தென்னரசு கூறியிருந்தார். ஆனால், வாக்கு எண்ணிக்கையில் தோல்வியை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொடுத்த மாதிரி குற்றம்சாட்டுகிறார் தென்னரசு’ என்றார்.

Share this post with your friends