Mnadu News

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் பயணம்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 29 ஆம் தேதி அரியலூர் பயணம் மேற்கொள்கிறார். அரியலுரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதையடுத்து, கங்கைக்கொண்ட சோழபுரம் அகழாய்வு பணிகளையும் பார்வையிட உள்ளார்
சென்னையில் இருந்து புறப்பட்டு வரும் 28 ஆம் தேதி திருச்சி செல்கிறார். அங்கிருந்து அரியலூர், பெரம்பலூரில் மாவட்டங்களுக்கு செல்கிறார். திருச்சி காகித ஆலை விரிவாக்கப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கான சிறப்பு விழா நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends