Mnadu News

முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா?: அண்ணாமலை கேள்வி?.

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியத்திற்கு அமைச்சர் கீதா ஜீவன் வருவதற்குள், முன் முன்னெச்சரிக்கை என்ற பெயரில் தமிழக பா.ஜ., திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர், மானூர் ஒன்றியத் தலைவர் ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இந்நிலையில், இந்த கைதை கண்டித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛அமைச்சர் கீதா ஜீவனுக்கு மகாராணி என்ற நினைப்பா?. தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு சர்வாதிகாரி என்ற நினைப்பா? உங்கள் அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டும் பொறுத்துக் கொண்டும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள்’ என கூறியுள்ளார்.

Share this post with your friends