Mnadu News

முதல் திரிபுரா முதல் அமைச்சரின் மனைவிக்கு அரசு பங்களா ஒதுக்கீடு :மாநில அரசு அறிவிப்பு.

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சச்சிந்திர லால் சிங் முதன்முதலாக திரிபுரா மாநிலத்தின் முதல் அமைச்சராகபதவி வகித்தவர்.இவர் ஜூலை 1 ஆம் தேதி 1963 முதல், 1973 நவம்பர் 1 வரை வடகிழக்கு மாநிலத்தில் முதல் அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2000-த்தில் சிங் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.இந்நிலையில், 91 வயதான சிங்கின் மனைவி சமீபத்தில் முதல் அமைச்சர்; மாணிக் சாஹாவிடம் குடியிருப்பு ஒதுக்கீடு செய்யக்கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார். சுதந்திர போராளியும், முன்னாள் முதல் அமைச்சருமான சச்சிந்திர லால் சிங்கின் பங்களிப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில், சிங்கின் மனைவியின் வேண்டுகோளுக்கிணங்க அகர்தலாவில் பங்களா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சிங்கின் மனைவி இறக்கும் வரை அந்த பங்களாவை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Share this post with your friends