Mnadu News

முதல் முறையாக நடக்க உள்ள நகர, மாநகர சபை கூட்டம்.

தமிழகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறுவதைப் போன்று முதன் முறையாக நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டம்; நடைபெற இருக்கிறது.இதில் பல்லாவரம் அருகே உள்ள பம்மல் 6-வது வாரடில் நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நடைபெறும் மாநகர சபை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்கள் குறைகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒவ்வொருவார்டுக்கும் ஒன்பது உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் வார்டு கவுன்சிலர்கள் தலைவர்களாக இருந்து வருகிறார்கள். இந்தக் கூட்டத்தில் மக்கள் குறைகள் கேட்கப்படும். பொதுவாக கிராம சபை கூட்டங்களை பொறுத்தவரையில் அங்கு நடைபெற்று வரக்கூடிய பணிகள் மற்றும் அடுத்ததாக நடைபெறவேண்டிய திட்டங்கள், மக்களுடைய கோரிக்கைகளை கேட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசினுடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படும். அதன் அடிப்படையில்தான் நகர பகுதிகளில் இருக்கக்கூடிய மக்களுடைய குறைகளை கேட்டு அவர்களுடைய குறைகளை நிவர்த்தி செய்யக்கூடிய வகையில், கிராம சபை கூட்டம் போன்றே நகர சபை கூட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More