தமிழ்நாடு போக்குவரத்து துறையில் பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கருத்தில் கொண்டும், ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதில் வாரத்திற்கு 2 நாட்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் 25 லட்சம் ரூபாய்க்கு இருவர் உத்திரவாதம் வழங்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.மேலும் சாட்சிகளை கலைக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபடக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது