Mnadu News

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாள்: தலைவர்கள் அஞ்சலி.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவரது சுட்டுரைப் பக்கத்தில், “இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்திக்கு அவரது நினைவு தினத்தில் எனது அஞ்சலிகள். விவசாயம், பொருளாதாரம் அல்லது ராணுவ பலம் எதுவாக இருந்தாலும், இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவதில் இந்திரா காந்தியின் பங்களிப்பு ஒப்பிட முடியாதது” என்று கார்கே ட்வீட் செய்துள்ளார்.
ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், “பாட்டி, நான் உங்கள் அன்பு மற்றும் மதிப்புகள் இரண்டையும் என் இதயத்தில் சுமந்து கொண்டிருக்கிறேன். உங்களுடைய உயிரை தியாகம் செய்த இந்தியாவை நான் சிதைக்க அனுமதிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், வங்கதேச விடுதலையில் இருந்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்துவது வரை இந்திரா காந்தி நாட்டை வழி நடத்திச் சென்றார்.
நாட்டின் வளர்ச்சிக்கான அவரது தளராத நெகிழ்ச்சி மற்றும் அசைக்க முடியாத பார்வைக்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம்” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

Share this post with your friends