நிர்வாக நடவடிக்கை எடுப்பதற்கு டெல்லி அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அமைச்சரவையை டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூட்டினர்.அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,டெல்லி மக்களின் பணியைத் தடுக்கும் அதிகாரிகள் மீது வரும் நாட்களில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். கைகள் கட்டப்பட்டு தண்ணீரில் நீந்த வேண்டும் என்ற நிலையில் இருந்தேன். நீந்த முடியாவிட்டாலும், என்னால் மிதக்க முடிந்தது. எவ்வளவோ தடைகள் இருந்தபோதிலும், நாங்கள் டெல்லியில் சிறப்பாகப் பணியாற்றினோம். எனது போராட்டம் முழுவதிற்கும் எனக்கு ஆதரவளித்ததற்காக டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். முன்பு இருந்ததை விட இனிமேல் 10 மடங்கு வேகத்தில் பணியாற்றுவோம். நாங்கள் கல்வியின் முன்மாதிரியை நாட்டிற்கு எடுத்து காட்டினோம். டெல்லி இப்போது முழு நாட்டிற்கும் திறமையான நிர்வாகத்தின் மாதிரியை வழங்கும். என்று கூறி உள்ளார்.

தொழில்நுட்ப கோளாறால் நடுவழியில் சிக்கிய ரோப் கார்: பயணிகளை பத்திரமாக மீட்பு.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் செயல்பட்டுவரும் ரோப் கார் சேவை திடீரென தொழில்நுட்பக்கோளாறு...
Read More