Mnadu News

மும்பை – அகமதாபாத் வந்தேபாரத் ரயில் பாதை: வேலி போடும் பணியைத் தொடங்கிய ரயில்வே.

மும்பை – அகமதாபாத் இடையே 622 கிலோ மீட்டர் தொலைவுள்ள வந்தே பாரத் ரயில் மிக முக்கியமான வழித்தடமாகும். இதேப் பாதையில் ஜப்பானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு விரைவில் புல்லட் ரயில் இயக்கப்படவிருக்கிறது. அதுவரை, வந்தேபாரத் ரயில் சேவை மிக முக்கிய போக்குவரத்து வசதியாக அமைந்திருக்கும். இந்த ரயில், பெரும்பாலும் திறந்த வெளிப் பகுதிகள் வழியாகவே இயக்கப்படுகிறது. குஜராத் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் பல்வேறு இடங்களில், வந்தே பாரத் ரயில் மீது மாடுகள் முட்டிய சம்பவம் அவ்வப்போது நடப்பதால், அதனைத் தடுக்கும் வகையில், வேலி அமைக்கும் பணியை ரயில்வே உருவாக்கி வருகிறது. இப்பணியை மேற்கொள்ள 8 நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்டு, இதற்காக ரூ.245 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends