Mnadu News

மும்பை ஐஐடிக்கு ரூ.315 கோடி நன்கொடை: முன்னாள் மாணவர் நந்தன் நிலேகனி தராளம்.

இன்போசிஸ் இணை நிறுவனரான நந்தன் நீலேகனி 1973 ஆம் ஆண்டு மும்பை ஐஐடியில் சேர்ந்து, எலெக்ட்ரிகல் இன்ஜீனியரிங் பிரிவில் பட்டம் பெற்றார். அக்கல்வி நிறுவனத்தில் இணைந்து 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அவர், 315 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.மும்பை ஐஐடி.,யில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை வளர்ப்பதற்கும், பொறியியல் மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கும் இந்த நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் படித்த கல்வி நிறுவனத்திற்கு அதிக நன்கொடை அளித்தவர்கள் பட்டியலில் நந்தன் நீலேகனியும் இணைந்துள்ளார்.

Share this post with your friends