மும்பை ஒர்லி பகுதியில் உள்ளஅன்னி பெசன்ட் சாலையில் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. ‘த்ரீ சிக்ஸ்டி வெஸ்ட்’ என்று இந்த கோபுரங்கள் அழைக்கப்படுகின்றன. இதில் ஒரு கோபுரத்தின் அதாவது டவர்- பியில் 63, 64, 65 ஆகிய தளங்களில் ‘பென்ட்ஹவுஸ்’ என்றுஅழைக்கப்படும் உச்சிப் பகுதி குடியிருப்பு உள்ளது. இந்த பென்ட்ஹவுஸ்’ 240 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வெல்ஸ்பன் குழுமத்தின் தலைவர் பி.கே. கோயங்கா இதனை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த பென்ட்ஹவுஸ் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. இந்த பென்ட்ஹவுஸ் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. மும்பையில் குடிசையில் வசிப்பவர்களுக்கு 300 சதுர அடியில் இலவச குடியிருப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதைவிட 100 மடங்கு பெரியதாக இந்த பென்ட்ஹவுஸ் உள்ளது. இந்த விற்பனைக்கான பத்திரப் பதிவு கடந்த புதன்கிழமை நடந்தது. ரியல் எஸ்டேட் தொடர்பான ஆய்வு மற்றும் தரவரிசை நிறுவனம் ஒன்றின் தலைவர் பங்கஜ் கபூர் கூறும்போது, “இந்தியாவில் இன்று வரை விற்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மிக விலையுயர்ந்தது இதுதான். அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் இதுபோன்ற சொகுசு குடியிருப்புகள் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

முடங்கிப்போன நாடாளுமன்றம்: ஏப்ரல் 3-ஆம் தேதி வரை இரு அவைககளும் ஒத்திவைப்பு.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் இரண்டாவது பாதி...
Read More