கர்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கடந்த மார்ச் 24-இல் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை மே 9-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாகவும், அதுவரை இடஒதுக்கீடு ரத்துக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.அதையடுத்து,மே 9-ஆம் தேதி வரை 4 சதவிகிதம் இடஒதுக்கீடு அடிப்படையில் எந்த நியமனமும், சேர்க்கையும் நடைபெறாது என்று கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.

ட்விட்டரின் புதிய சிஇஓ ஆக லிண்டா யாக்காரினோ பொறுப்பேற்பு.
கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருந்தார் மஸ்க். பயனர்கள் தங்களது கருத்துகளை...
Read More