Mnadu News

முஸ்லிம் வாக்குகள் பாஜகவுக்கு தேவையில்லை: பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா பேச்சு.

கர்நாடகாவில் ஷிவமொகா தொகுதியில் பாஜக சார்பில் வீரசைவ-லிங்காயத் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கலந்து கொண்டு பேசினர்.,இந்த கூட்டத்தில் பேசிய ஈஸ்வரப்பா,ஷிவமொக்கா தொகுதியில் 50,000 முதல் 55,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஒரு முஸ்லிம் வாக்குகூட தேவையில்லை என்பதை நான் நேரடியாக கூறுகிறேன். மருத்துவம் மற்றும் கல்விக்காக பல்வேறு உதவிகளை அவர்களுக்கு செய்துள்ளோம். அந்த முஸ்லிம் மக்கள் எங்களுக்காக வாக்களிப்பார்கள் என்றாh.;முஸ்லிம்களின் வாக்குகளை பெறுவதற்காக எதிர்க்கட்சிகள் ஹிந்துகளையும் முஸ்லிம்களையும் பிரித்து வருகிறார்கள். ஹிந்துகள் தாழ்ந்தவர்களாகவும், முஸ்லிம்கள் உயர்ந்தவர்களாகவும் ஆக்குவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஆனால், சில தேசியவாத முஸ்லிம்கள் பாஜகவுக்கு கண்டிப்பாக வாக்களிப்பார்கள்.” எனப் பேசினார்.

Share this post with your friends