Mnadu News

மு.க.ஸ்டாலின் எனது அரசியல் நண்பர்: மம்தா பானர்ஜி பேச்சு.

சென்னையில் நடைபெறும் மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசனின் மூத்த சகோதரர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வருகிறார். இந்நிலையில், சென்னை புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் மம்தா பேசுகையில்,
அரசியலைவிட மக்களின் உயிர் முக்கியம் என்பதால் கருத்து கூறமாட்டேன். எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். பலர் உயிரிழந்துள்ளனர். பலரை இன்னும் காணவில்லை. உச்சநீதிமன்றத்தின் கீழ் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இன்று நான் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளேன். அவர் எனது அரசியல் நண்பர். நான் சென்னை போவதால், மரியாதை நிமிர்த்தமாக சந்திக்கவுள்ளேன் என்றார்.

Share this post with your friends