ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறால், விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகள், ஆலந்தூர் அறிஞர் அண்ணா ரயில் நிலையத்தில் மாறி விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது. இதேபோன்று, விமான நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் பயணிகள், ஆலந்தூர் அறிஞர் அண்ணா ரயில் நிலையத்தில் மாறி கோயம்பேடு, ஷெனாய் நகர், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்ல வேண்டிருந்தது.தற்போது 20 மணிநேரத்துக்கு பிறகு அதிகாலையில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல் செயல்படுகிறது.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More