Mnadu News

மெட்ரோ ரயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு.

மெட்ரோ ரயில் பயன்படுத்துவோர் எண்ணிக்கையை அதிகரிக்க ‘க்யூஆர்’ டிக்கெட் பதிவு முறையில் 20 சதவீத தள்ளுபடியையும், மெட்ரோ அட்டை வைத்து பயணிப்போருக்கு கூடுதலாக 20 சதவீத தள்ளுபடியையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கியது. அதன் விளைவாக மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
அக்டோபர் மாதத்தில் 61 லட்சத்து 56 ஆயிரம்; பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். அக்டோபர் 21-ஆம் தேதி மட்டும் அதிகபட்சமாக 2 லட்சத்து 65 ஆயிரத்து 683 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும், அக்டோபர் மாதத்தில் 43 ஆயிரத்து 454 பேர் அதிகமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் மட்டும் ‘க்யூஆர்’ பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 18 லட்சத்து 57ஆயிரத்து 688 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதோடு, பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 36 லட்சத்து 33 ஆயிரத்து 56 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

Share this post with your friends