Mnadu News

மெல்ல இயல்புநிலைக்கு திரும்பும் அசாம்: கனமழைக்கு 2.72 லட்சம் பேர் பாதிப்பு.

அசாம் மாநில பேரழிவு மேலாண்மை ஆணையத்தின் தகவல் படி,பஜாலி, பக்ஸா, பார்பேட்டா, டர்ராங், துப்ரி, திப்ருகர், கோல்பாரா, கோலகத், ஜோர்ஹாட், கம்ரூப், லகிம்பூர், நாகோன், நால்பரி மற்றும் தமுல்பூர் ஆகிய மாவட்டத்தில் உள்ள 37 வருவாய் வட்டங்களின் கீழ் சுமார் 874 கிராமங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன.அதேசமயம், பார்பேடா மாவட்டத்தில் 1லட்சத்து 70 ஆயிரம் பேரும், பஜாலியில் 60 ஆயிரத்து 707 பேரும், லக்கிம்பூரில் 22 ஆயிரத்து 60 பேரும், நால்பரி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 351 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நால்பரி மாவட்டத்தில் 222 விலங்குகள் அடித்துச் செல்லப்பட்டன.என்டிஆர்எஃப், எஸ்டிஆர்எஃப், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Share this post with your friends