மேகாலயத்தில் ஆட்சியமைக்க போதிய பெரும்பான்மை உள்ளதாக அக்கட்சியின் தேசிய மக்கள் கட்சி தலைவரும், முதல்வருமான கான்ராட் சங்மா தெரிவித்துள்ளார.தேர்தல் வெற்றியைத்தொடர்ந்து மேகாலய ஆளுநர் பாகு சௌஹானை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க கான்ராட் சங்மா உரிமை கோரினார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கான்ராட் சங்மா, பாஜக எங்களுக்கு முழு ஆதரவைக் கொடுப்பதாக அறிவித்துள்ளது. அதனால் ஆளுநர் பாகு சௌஹானைச் சந்தித்து ஆட்சி அமைக்க நாங்கள் உரிமை கோரினோம். ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தோம். பாஜக மற்றும் மற்ற கட்சிகளின் ஆதரவு தேசிய மக்கள் கட்சிக்கு கிடைத்துள்ளது. இதனால், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.மேகாலயத்தில் 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று (மார்ச் 2) காலைமுதல் எண்ணப்பட்டன. இதில், தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

உச்சநீதிமன்றம்கிளையைசென்னையில்அமைக்கவும்:தலைமைநீதிபதியிடம் முதல் அமைச்சர் கோரிக்கை.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 166 கோடி ரூபாய் மதிப்பில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட...
Read More